என் மலர்

  செய்திகள்

  நடுவானில் திடீர் எந்திரகோளாறு: துபாய் சென்ற பெங்களூர் விமானம் தப்பியது
  X

  நடுவானில் திடீர் எந்திரகோளாறு: துபாய் சென்ற பெங்களூர் விமானம் தப்பியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெங்களூரில் இருந்து 176 பயணிகளுடன் துபாய் சென்ற விமானம் தொழில் நுட்ப கோளாறால் டெல்லியில் தரை இறங்கியது.
  புதுடெல்லி:

  பெங்களூரில் இருந்து தனியார் போயிங் விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட்டது. அதில் விமான பணியாளர்கள் உள்பட 176 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது திடீர் என்று விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

  தரை இறங்கும் போது விமானத்தின் சக்கரங்களை கீழே இயங்கச் செய்யும் ஹைடிராவிக் சிஸ்டம் சரிவர செயல்படாததை விமானி கண்டுபிடித்தார். அப்போது விமானம் டெல்லி மீது பறந்து கொண்டு இருந்தது.

  உடனே விமானம் அவசரமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. காலை 8.45 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.

  முன்னதாக டெல்லியில் பயணிகளை பத்திரமாக மீட்கவும், அவசர உதவிக்காகவும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. விமானம் பத்திரமாக தரை இறங்கியதால் 176 பயணிகளுடன் விமானம் விபத்தில் இருந்து தப்பியது.

  Next Story
  ×