என் மலர்

  செய்திகள்

  திருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம்
  X

  திருப்பதி கோவிலில் 3-ந்தேதி பிரதமர் மோடி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி வருகிற 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
  நகரி:

  பிரதமர் நரேந்திர மோடி வருகிற 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அன்று காலை 10.25 மணிக்கு டெல்லியில் இருந்து மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு 10.55 மணிக்கு திருப்பதி வருகிறார்.

  11 மணிக்கு திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இந்தியன் சைன்ஸ் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். பின்னர் மதியம் 1 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். 1.55 மணிக்கு ஏழு மலையானை தரிசனம் செய்கிறார்.

  அதன் பிறகு 2 மணிக்கு திருப்பதியில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார். மோடி வருகையை முன்னிட்டு திருப்பதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்படுகிறது.
  Next Story
  ×