என் மலர்

  செய்திகள்

  கிழக்கு கமாண்டோ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி தல்பீர் சிங்
  X

  கிழக்கு கமாண்டோ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி தல்பீர் சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் கிழக்கு பகுதி கமாண்டோக்களை சந்தித்தார்.
  கொல்கத்தா:

  தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹாக் வரும் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.

  இந்நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில், தல்பீர் சிங் கிழக்கு பகுதி கமாண்டோக்களை சந்தித்தார். கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

  உள்நாட்டு அளவில் நடைபெறும் மோதல், பேரிடம் மேலாண்மை, உள்நாட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தல்பீர் சிங் அப்போது உரையாற்றினார்.

  மேலும், எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக தல்பீர் சிங் உறுதி அளித்தார்.
  Next Story
  ×