என் மலர்

  செய்திகள்

  மலிவு விலை 4G போன்களை வெளியிட்ட மைக்ரோமேக்ஸ்
  X

  மலிவு விலை 4G போன்களை வெளியிட்ட மைக்ரோமேக்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் Vdeo மாடலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் 4G VoLTE தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய Vdeo மாடல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  விலையை பொருத்த வரை ரூ.5000/- பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்களுடன் ரிலையன்ஸ் ஜியோ 4G சிம் கார்டு மற்றும் கூகுள் டூயோ ஆப் உள்ளிட்டவை இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துடன் வீடியோ காலிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. 

  மைக்ரோமேக்ஸ் Vdeo 1 மற்றும் Vdeo 2 ஸ்மார்ட்போன்களில் 4G VoLTE, ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளமும் கழற்றக் கூடிய பேக் கவர் மற்றும் மெட்டல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் Vdeo ஸ்மார்ட்போன்களின் விலையைப் பொருத்த வரை Vdeo 1 ரூ.4,440/- என்றும், Vdeo 2 ரூ.4,990/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பொருத்த வரை Vdeo 2 போன் பெரிய 4.5 இன்ச் FWVGA திரை மற்றும் 1800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. Vdeo 1 போனில் 4.0 இன்ச் WVGA திரை மற்றும் 1600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

  மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1GB ரேம், குவாட் கோர் பிராசஸர், 8 GB இன்டர்னல் மெமரி, மற்றும் 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை டூயல் சிம் ஸ்லாட், வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி ஒடிஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
  Next Story
  ×