என் மலர்

  செய்திகள்

  ராணுவ விவகாரம்: மம்தா - கவர்னர் இடையே வார்த்தை மோதல்
  X

  ராணுவ விவகாரம்: மம்தா - கவர்னர் இடையே வார்த்தை மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான் மத்திய அரசுக்காக பேசவில்லை. என்னுடைய மனசாட்சியிபடி பேசுகிறேன் என்று மேற்கு வங்காள கவர்னர் கே.என். திரிபாதி கூறியுள்ளார்.
  மேற்கு வங்காளத்தின் இரண்டு சுங்கச் சாவடிகளில் ராணுவம் திடீரென குவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேற்கு வங்காளத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்றும், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்றும் கடுமையான வார்த்தைகளால் மத்திய அரசை குற்றம்சாட்டியிருந்தார்.

  இதற்கு அம்மாநில ஆளுநர் கே.என். திரிபாதி வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருந்தார். அவர் ‘‘ராணுவம் போன்ற பொறுப்பான அமைப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் கூறும்போது ஒருவர் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த மம்மா ‘‘திரிபாதி மத்திய அரசுக்கு ஆதரவாக, அவர் மத்திய அரசின் குரலாக பேசுகிறார்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் ‘‘நான் என்னுடைய மனசாட்சியின் குரலாகவே பேசுகிறேன்’’ என்று மம்தாவிற்கு திரிபாதி பதில் கூறியுள்ளார்.

  இதனால் மத்திய அரசுக்கும் - மம்தாவிற்கும் இடையிலான வார்த்தை போர், தற்போது மம்தா- திரிபாதிக்குகிடையில் மாறியுள்ளது.
  Next Story
  ×