என் மலர்

  செய்திகள்

  ரோடு ரோலர் மோதியதால் பள்ளி சுவர் இடிந்தது: 3 மாணவர்கள் உயிரிழப்பு
  X

  ரோடு ரோலர் மோதியதால் பள்ளி சுவர் இடிந்தது: 3 மாணவர்கள் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் பள்ளியின் மீது ரோடு ரோலர் மோதியதில், சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர்.
  லக்னோ:

  உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டம் தல்காம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இன்று மதிய உணவு சாப்பிடுவதற்காக மாணவர்கள் சிலர் சுவர் ஓரம் அமர்ந்திருந்தனர். அப்போது, சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுவரின் மீது திடீரென இடித்துவிட்டது. இதனால் சுவர் இடிந்து மாணவர்கள் மீது விழுந்து அமுக்கியது.

  இதில், இடிபாடுகளில் சிக்கிய ஜான்வி (7), வந்தனா (11), ரிட்லி (9) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×