என் மலர்

  செய்திகள்

  75 வயது தாயாரை ஈவு இரக்கமின்றி விளக்குமாற்றால் அடித்துத் துவைத்த பெண்
  X

  75 வயது தாயாரை ஈவு இரக்கமின்றி விளக்குமாற்றால் அடித்துத் துவைத்த பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படுக்கையில் சிறுநீர் கழித்த 75 வயது தாயாரை விளக்குமாற்றால் அடித்துத் துவைத்த பெண்ணை கேரள போலீசார் இன்று கைது செய்தனர்.
  கண்ணூர்:

  முதிய பெண் ஒருவரை இளம்பெண் விளக்குமாற்றால் அடித்துத் துவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகியது. இதனைப் பார்த்த கேரள போலீசார் இளம்பெண் மற்றும் அவரது கணவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர்.

  இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில் "அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்துள்ளோம். தாக்கப்பட்ட முதியவரான கார்த்தியானி அம்மா (75) தற்போது தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

  தாயாரை அடித்த அந்த பெண்ணின் பெயர் சந்திரமதி. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்க சென்றபோது தாயாரை கவனித்துக் கொள்வது மகனின் கடமை. மகளின் வேலையல்ல என்று சந்திரமதி தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மறதி நோயால் சுயநினைவின்றி அவதிப்பட்டு வந்த கார்த்தியானி அம்மா படுக்கையில் சிறுநீர் கழித்ததே சந்திரமதி அவரை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×