என் மலர்

  செய்திகள்

  பானிபட் கம்பள தயாரிப்பு ஆலையில் தீ: 7 தொழிலாளர்கள் பலி
  X

  பானிபட் கம்பள தயாரிப்பு ஆலையில் தீ: 7 தொழிலாளர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள கம்பளி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
  பானிபட்:

  அரியானா மாநிலம் பானிபட் தாலுகா கோகத் கிராமத்தில் கம்பளி தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இன்று பிற்பகல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. எளிதில் தீப்பிடக்கக் கூடிய பொருள் என்பதால் தீ மளமளவென சுற்றிலும் பரவியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இவ்விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 15க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து கலால் மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
  Next Story
  ×