search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய பள்ளியில் மாணவிகள் கற்பழிப்பு: தலைமை ஆசிரியர் கைது
    X

    மராட்டிய பள்ளியில் மாணவிகள் கற்பழிப்பு: தலைமை ஆசிரியர் கைது

    மராட்டியத்தில் உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
    மும்பை:

    மராட்டியத்தில் உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகள் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

    மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டம் லோகண்ட பாலா பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் தீபாவளியையொட்டி பள்ளிக்கூடத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக் கப்பட்டதாக பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

    இதுபற்றி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பள்ளியில் மேலும் சில மாணவிகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக உண்டு உறைவிட பள்ளி ஊழியர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சே, இதில் உடனடி யாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு புல்தானா மாவட்ட பொறுப்பு மந்திரி பாண்டூரங் பூந்த்கரிடம் கேட்டு கொண்டார்.

    அதன்படி, இதுகுறித்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு புல்தானா மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு மந்திரி பாண்டூரங் பூந்த்கர் உத்தர விட்டார். இதன்பேரில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் என மேலும் 4 பேர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    இந்த சம்பவத்தில் 6 சிறுமிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் போலீசாரிடம் முறைப்படி புகார் செய்திருப்பதாகவும் மந்திரி பாண்டூரங் பூந்த்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அதேசமயம், இந்த வழக்கு விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று பழங்குடியினர் நலத்துறை மந்திரி விஷ்ணு சாவ்ரா கூறினார். இதனிடையே, இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று காம்காவ் பகுதி மக்கள் உள்ளூர் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×