என் மலர்

  செய்திகள்

  போபால் சிறை உடைப்பு - என்கவுன்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவு
  X

  போபால் சிறை உடைப்பு - என்கவுன்டர் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் சிறையில் இருந்து 8 சிமி தீவிரவாதிகள் தப்பியோடியது தொடர்பாகவும், பின்னர் அவர்கள் அனைவரும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகவும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  இந்தூர்:

  மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மத்திய சிறையில் சிறை காவலரை கொன்றுவிட்டு தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த 8 தீவிரவாதிகள் கடந்த 31-ம் தேதி அதிகாலை தப்பியோடினர். பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவர்கள் எட்டுபேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

  போலீசாரின் இந்த நடவடிக்கையை போலி என்கவுன்டர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்தியப் பிரதேசம் மாநில ஐகோர்ட்டில் நேற்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இதற்கிடையில், போபால் நகரில் சிறையில் இருந்து 8 சிமி தீவிரவாதிகள் தப்பியோடியது தொடர்பாகவும், பின்னர் அவர்கள் அனைவரும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகவும் நீதி விசாரணைக்கு மத்தியப் பிரேதேசம் மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, நேற்று பின்னிரவு வெளியான மாநில அரசின் செய்திக்குறிப்பில், ‘உயர்பாதுகாப்பு மிகுந்த சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியது, பின்னர் நடைபெற்ற என்கவுன்டர் ஆகியவற்றின் பின்னணி தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் நீதி விசாரணைக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×