என் மலர்

  செய்திகள்

  ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி
  X

  ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் பெண் ஒருவர் குழந்தை பெற்றார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் தனது குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.
  பீகார் மாநிலம் கிசான்கங்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான கஷ்மிரி கதுன் தனது கணவருடன் டெல்லியில் இருந்து கிசான்கஞ்சுக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தார். கஷ்மிரி கதுன் கர்ப்பிணியாக இருந்தார்.

  ரெயில் பராயுனி ரெயில்வே நிலையத்திற்கு வரும்முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரெயில் பராயுனி ஸ்டேஷன் வந்ததும் டாக்டர்கள் மருந்துகள் வழங்கி ஊசி போட்டனர். பின்னர் ரெயில் கதிஹார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமான நிலையை அடைந்தது.

  அந்த சமயத்தில் அவருக்கு ரெயிலேயே குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் ‘‘மரணம் என்பது இயற்கையானது. ஆனால், எனது மனைவியின் உடலை சிசான்கஞ்ச் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கேட்டுக்கொண்டார்.
  Next Story
  ×