என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கி முனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள எருமைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
  X

  துப்பாக்கி முனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள எருமைகள் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துப்பாக்கி முனையில் 18 எருமைகளைக் திருடிச் சென்ற மர்ம நபரை உத்தர பிரதேச போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
  லக்னோ:

  உத்தர பிரதேச மாநிலம் சர்தாவால் நகரில் உள்ள பால் பண்ணை ஒன்றில் நேற்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த 18 எருமைகள், 4 பசுக்களை திருடி வேனில் ஏற்றிச்சென்று விட்டான்.

  இச்சம்பவத்தைத் தொடர்ந்து தங்களது பண்ணையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள விலங்குகளை மர்ம மனிதன் துப்பாக்கி முனையில் திருடிசென்று விட்டதாக பண்ணை உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

  இது தொடர்பாக முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி முனையில் மர்ம மனிதன் எருமைகளைக் திருடிச் சென்ற சம்பவம் உத்தர பிரதேச மாநில மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  Next Story
  ×