என் மலர்

  செய்திகள்

  26 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சேர்ந்தவரின் முதல் பயணமாக ராகுல் காந்தி அயோத்தி சென்றார்
  X

  26 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சேர்ந்தவரின் முதல் பயணமாக ராகுல் காந்தி அயோத்தி சென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று அயோத்தி சென்றார்.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற நிலையில், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாதயாத்திரை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார்.

  பைசாபாத் நகரில் யாத்திரையை தொடங்கவுள்ள அவர், இன்று காலை அயோத்தி நகருக்கு சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற அனுமன் கார்கி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் கடந்த 26 ஆண்டுகளாக அயோத்தி நகருக்கு சென்றதில்லை. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1990-ம் ஆண்டு அயோத்திக்கு செல்வதாக இருந்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

  இந்நிலையில், 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அயோத்தி நகருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தார்.

  ‘20 ஆண்டுகளுக்கு மேலாக அயோத்திக்கு வராத நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்போது இங்கு வந்துள்ளது தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான்’ என்று ராகுல் காந்தி சென்றிருந்த கோவிலின் வெளியில் பல ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×