என் மலர்

  செய்திகள்

  காளஹஸ்தி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
  X

  காளஹஸ்தி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காளஹஸ்தி அருகே விநாயகர் சிலைகள் கரைக்க சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
  ஸ்ரீகாளஹஸ்தி:

  ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் தொண்டமானுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரரெட்டி. இவருடைய மகன் ஜெயந்த்கிருஷ்ணா (வயது 13), அதே பகுதியை சேர்ந்த பத்மநாபரெட்டியின் மகன்கள் பத்திரெட்டி (9), நீரஜ்கிருஷ்ணா (8). 3 பேரும் திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதில் ஜெயந்த் கிருஷ்ணா 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

  விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக அவர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த பகுதிகளில் பல இடங்களில் விநாயகர் சிலைகளும், வீடுகளில் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று அருகே உள்ள ரெட்டிகுண்டா குளத்தில் கரைக்கப்பட்டன.

  மாணவர்கள் இருந்த பகுதியில் இருந்த விநாயகர் சிலைகளை அந்த பகுதி பெண்கள் எடுத்து சென்றனர். அவர்களுடன் ஜெயந்த்கிருஷ்ணா, பத்திரெட்டி, நீரஜ்கிருஷ்ணா ஆகியோரும் சென்றனர்.

  குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் போது 3 பேரும் தண்ணீர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயந்த் கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார்.

  பத்திரெட்டி, நீரஜ்குமாருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×