என் மலர்

  செய்திகள்

  பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிடுபவர்களை சந்திக்க தேவையில்லை: ராஜ்நாத் சிங்கிடம் இஸ்லாமிய மதகுருமார்கள் வலியுறுத்தல்
  X

  பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிடுபவர்களை சந்திக்க தேவையில்லை: ராஜ்நாத் சிங்கிடம் இஸ்லாமிய மதகுருமார்கள் வலியுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிடும் பிரிவினைவாதிகளை சந்திக்க தேவையில்லை என்று ராஜ்நாத் சிங்கை சந்தித்த மத குருமார்கள் வலியுறுத்தினர்.
  புதுடெல்லி:

  காஷ்மீர் மாநிலத்தில் 60 நாட்களை கடந்து தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி குழு காஷ்மீரில் செப்டம்பர் 4, 5 தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தது.

  இந்நிலையில், ராஜ்நாத் சிங்கை இஸ்லாமிய மத குருமார்கள் குழு ஒன்று இன்று தலைநகர் டெல்லியில் சந்தித்தனர்.  

  சந்திப்பிற்கு பின்னர் கரிப் நவாப் அமைப்பின் தலைவர் மவுலானா அன்சார் ரஸா செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

  நாங்கள் உள்துறை மந்திரியை சந்தித்தோம். இது ஒரு சிறந்த சந்திப்பு. காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசினோம். நம்முடைய உள்துறை மந்திரி நிச்சயம் இந்த பிரச்சனையை தீர்ப்பார் என்று உறுதியாக கூறுகிறோம்.  சிலர், பிரிவினைவாதிகளை சந்தித்தனர். அவர்கள் அப்படி செய்திருக்க கூடாது. ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றி இருக்க வேண்டும்.

  காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது அப்படியே தான் நீடித்திருக்கும். இந்தியா வாழ்க என்று முழக்கமிடுபவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாகிஸ்தான் வாழ்க என்பவர்களிடம் பேச்சு நடத்த தேவையில்லை.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.
  Next Story
  ×