என் மலர்

  செய்திகள்

  காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் காயம்
  X

  காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
  ஸ்ரீநகர்:

  ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் கர்னாஹ் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இன்று வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

  இந்த சண்டையில் பாதுகாப்பு படையின் மூன்று வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்துவருகிறது. தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வதற்காக கூடுதல் படைகள் விரைந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  Next Story
  ×