search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் அனல்மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
    X

    தெலுங்கானாவில் அனல்மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

    தெலுங்கானாவில் ’அனைவருக்கும் குடிநீர்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    ஐதராபாத்:

    தெலங்கானா மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார்.  இந்நிலையில், இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி “தெலுங்கான மாநிலம் உருவாகி இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆனாலும், அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.  தண்ணீரை சேமிப்பது அனைத்து குடிமக்களின் கடமை. தண்ணீர் சேமிக்கப்பட்டால், அனைவரும் பயன்பெற முடியும்.” என்று மோடி தெரிவித்தார்.

    மேலும், தெலுங்கானாவில் 10,599 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக உள்ள அனல்மின் நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். என்.டி.பி.சி. நிறுவனம் இங்கு இரண்டு கட்டமாக இந்த அனல்மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது.

    முதல் கட்டமாக 1600 மெகாவாட் திறன் கொண்ட நிலையத்தையும் இரண்டாவது கட்டமாக 2400 மெக வாட் திறன் கொண்ட நிலையத்தையும் என்டிபிசி நிறுவனம் அமைக்க இருக்கிறது.

    இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மோடி, பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
    Next Story
    ×