என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார்.

    கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், கடம்ப மரக்கன்றை பரிசாக அனுப்பி வைத்தார்.

    கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்திருந்தார். இதற்கு பதிலாக கடம்ப மரக்கன்றை மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்தது.

    காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்றும் பிரிட்டன் தூதரகம் கூறியது.

    இந்நிலையில் நேற்று, அந்த மரக்கன்றை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான, ' 7 லோக் கல்யாண் மார்க்கில்' மோடி நட்டு வைத்தார்.

    இது தொடர்பாக வெளியாகி உள்ள 40 வினாடிகள் கொண்ட வீடியோவில் பிரதமர் மோடி மரக்கன்றை நட்டு, தண்ணீர் பாய்ச்சும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும். 

    • இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
    • காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.

    வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    • 1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது?
    • அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பருவமழை இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீ்ர்த்தது. கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது.

    மழை வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு முதற்கட்டமாக 13,800 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி 1600 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 12 ஆயிரம் கோடி ரூபாயை SDRF கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நிதியுதவி குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங்கிடம் என்.டி. டிவி கேள்வி எழுப்பியது.

    அதற்கு பகவத் மான் சிங் பதில் அளித்து கூறியதாவது:-

    1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பஞ்சாப் மாநிலம RDF-யை பயன்படுத்தி வந்தது. விவசாய பொருட்கள் விற்பனை, கொள்முதலுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, அவை சாலைகள், மண்டிகள் அல்லது விவசாயிகள் மொத்த விற்பனை சந்தைகளை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆர்டிஎஃப் எந்தவித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. பாஜக அல்லாத அரசாங்க மாநிலத்தில் வழக்கமாக இது நடக்கும்.

    SDRF கணக்கு 2010/11-ல் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாநிலம் 84 கோடி ரூபாய் பெற்றது. ஆனால், 184 ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2011/12-ல் 171 கோடி ரூபாய் பெறப்பட்டது. 159 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதேபோல் 2012/13 மத்திய அரசு 272 கோடி ரூபாய் அனுப்பியது. 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2013/14-ல் 194 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 236 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

    மொத்தமாக பஞ்சாப் மாநிலம் 5012 ரூபாய் பெற்றுள்ளது. அதிலிருந்து எஸ்டிஆர்எஃப் 3820 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் சட்டவிரோதம் அல்லது மறைக்க ஒன்றுமில்லை. அதில் 1200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த ரூ.12,000 கோடி எங்கிருந்து வந்தது? பாஜக உண்மையான தொகையுடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தது.

    இவ்வாறு பகவத் மான் சிங் தெரிவித்துள்ளார்.

    • 20 ரூபாய்க்கு கடைக்காரர் 4 பானி பூரி வழங்கியதால் பெண் ஒருவர் விரக்தி.
    • 6 வழங்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம்.

    வெற்றி ஊர்வலம், அரசியல் பேரணி போன்றவற்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல், தடை ஏற்படுவதை பார்த்திக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு பானி பூரிக்காக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சுர்சாகர் லேக் பகுதியில், சாலையோர கடையில் பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்காரரிடம் 20 ரூபாய் கொடுத்து பானி பூரி கேட்டுள்ளார். 20 ரூபாய்க்கு 6 பானி பூரி எனக் கடைக்காரர் கூறிவிட்டு, 4 பானி பூரிதான் கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால், அந்த பெண் தனக்கு கூடுதலாக 2 பானி பூரி வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், கடைக்காரரிடம் இருந்து மேலும் 2 பானிபூரி கிடைக்காதது அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

    கடைக்காரரிடம் இருந்து தனக்கு நீதி வேண்டும் என நடுசாலையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. டூவிலர், காரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும்போது, 20 ரூபாய்க்கு 6 பானிபூரி என்ற நியாயமான வர்த்தகத்தை அமல்படுத்த வேண்டும். அதைவிட ஒன்னுக்கூட குறையக்கூடாது" எனக் கண்ணீர் விட்டு தனது ஆதங்களை வெளிப்படுத்தினார்.

    • தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் பதவிகளை ஏபிவிபி பிடித்தது.
    • துணைத் தலைவர் பதவிக்கான பேட்டியில் காங்கிரஸ் ஆதரவு NSUI வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (DUSU) தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2.75 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 52 மையங்களில் 195 வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 711 EVMs ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 39.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ்.-யின் மாணவர்கள் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ஏபிவிபி- ABVP) முக்கிய பதவிகளை பிடித்தது.

    தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவியை பிடித்த நிலையில், காங்கிரஸ் ஆதரவு NSUI துணைத் தலைவர் பதவியை பிடித்தது.

    ABVP-யின் ஆர்யன் மான் தலைவர் பதவியில் 28841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். NSUI சார்பில் போட்டியிட்ட ஜோஸ்லின் சவுத்ரி 12654 வாக்குகள் பெற்றார்.

    துணைத் தலைவருக்கான போட்டியில் NSUI சார்பில் போட்டியிட்ட ராகுல் ஷன்ஸ்லா 29339 வாக்குகளும், ஏபிவிபி-யின் கோவிந்த் தன்வர் 20547 வாக்குகள் பெற்றனர்.

    தலைவர்- ஆர்யன் மான் (ஏபிவிபி)

    துணைத் தலைவர்- ராகுல் ஜன்ஸ்லா (NSUI)

    செயலாளர்: குணால் சவுத்ரி (ஏபிவிபி)

    இணைச் செயலாளர்: தீபிகா ஜா (ஏபிவிபி)

    ஆர்யன் மான் ஹரியானா மாநிலம் பஹதுர்காவைச் சேர்ந்தவர். ஹன்ஸ்ராஜ் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த இவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நுலக அறிவியல் முதுகல பட்டம் படித்து வருகிறார்.

    • ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
    • உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.

    எம் ஆதார் (mAadhaar) என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு ஆகும். இது ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆதார் சேவைகளை அணுகுவதற்கும், டிஜிட்டல் ஆதார் அட்டையை மென்மையான நகலாக (soft copy) எடுத்துச் செல்வதற்கும், பல ஆதார் சேவைகளை ஒரே இடத்தில் பெறுவதற்கும் உதவுகிறது.

    எம் ஆதார் பயன்பாட்டின் முக்கிய அம்சங்கள்:

    டிஜிட்டல் ஆதார்: உங்கள் ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவத்தை இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து, அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

    ஆதார் தகவல் மேலாண்மை: உங்கள் ஆதார் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

    ஆன்லைன் சேவைகள்: ஆதாரைப் புதுப்பித்தல், முகவரியை மாற்றுதல் போன்ற பல ஆன்லைன் சேவைகளுக்கான அணுகலை இது வழங்குகிறது.

    QR குறியீடு: உங்கள் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய இது உதவுகிறது.

    பன்மொழி ஆதரவு: இந்த பயன்பாடு பல மொழிகளில் கிடைக்கிறது.

    ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்:

    Google Play Store அல்லது Apple App Store-ல் இருந்து mAadhaar ஆப்-ஐ உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    உங்கள் ஆதார் எண் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப் பயன்படுத்தி ஆப்-ல் பதிவு செய்யுங்கள்.

    பதிவு செய்தபிறகு, டிஜிட்டல் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம், உங்கள் தகவல்களைப் பார்க்கலாம் மற்றும் ஆன்லைன் சேவைகளை அணுகலாம்.

    ஆதார் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா இனி கவலையில்லை!

    பல்வேறு சேவைகளை உள்ளடக்கிய ஆதார் (mAadhar) சேவைக்கான மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஆதார் கார்டு சேவைக்கு ஆதார் தொடர்பான அலுவலகங்களுக்கு செல்லாமல் Mobile app மூலமாக செய்துகொள்ளலாம்.

    இ-ஆதார் செயலி (mAadhaar App) என்பது UIDAI (Unique Identification Authority of India) வெளியிட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு. இதன் மூலம் ஆதார் தொடர்பான பல சேவைகளை எளிதாக தங்கள் மொபைல் போன்களில் பெறலாம்.

    எம் ஆதார் (mAadhaar App)டவுன்லோட் செய்து எப்படி பயன்படுத்துவது & அதன் பல்வேறு அம்சங்கள்:

    செயலி பதிவிறக்கம் (App Download)

    * Android: Google Play Store-ல் "mAadhaar" என தேடவும் → Install செய்யவும்.

    * iPhone: App Store-ல் "mAadhaar" என தேடவும் → Get செய்யவும்.

    மொழி தேர்வு

    * செயலியை திறந்தவுடன், உங்களுக்கு வசதியான மொழியை (தமிழ் உள்பட) தேர்வு செய்யவும்.

    * பிறகு "Continue" அழுத்தவும்.

    OTP மூலம் பதிவு

    * உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கேட்கப்படும்.

    * அந்த எண்ணை கொடுக்கவும் → SMS-ல் OTP வரும் → அதை உள்ளிடவும்.

    உங்கள் ஆதார் இணைப்பு

    * "Add Aadhaar" என்பதைத் தேர்வு செய்யவும்.

    * 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க VID (Virtual ID) கொடுக்கவும்.

    * மீண்டும் OTP வரும் → OTP கொடுத்து உறுதிப்படுத்தவும்.

    * இப்போது உங்கள் டிஜிட்டல் ஆதார் கார்டு செயலியில் சேமிக்கப்படும்.

    முக்கிய சேவைகள் (App-ல் கிடைக்கும்)

    1. ஆதார் Download – PDF/digital copy எப்போதும் பயன்படுத்தலாம்.

    2. QR Code – வேகமாக ஆதார் தகவல் பகிரலாம்.

    3. Update Address – முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.

    4. Lock/Unlock Aadhaar – தேவையானபோது ஆதாரை பூட்டலாம், மீண்டும் திறக்கலாம்.

    5. Offline e-KYC – வங்கி / SIM / பிற சேவைகளுக்கு KYC பகிரலாம்.

    6. Generate TOTP – OTP க்கு மாற்றாக செயலியில் தற்காலிக password கிடைக்கும்.

    பாதுகாப்பு அம்சங்கள்

    * ஆதார் லாக்/அன்லாக் → யாரும் உங்கள் ஆதார் விவரங்களை தவறாக பயன்படுத்த முடியாது.

    * Biometric Lock → உங்கள் கைரேகை/கண்கள் மூலம் மட்டுமே Authentication செய்யலாம்.

    நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.

    இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் கடந்த மாதம் வெள்ளம் ஏற்பட்டது. இதில் பல மக்கள் அவர்களது வாழ்வாதரத்தை மற்றும் சொந்தங்களை இழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நடிகையும் பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார்.

    ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை இவ்வளவு தாமதமாக வந்து சந்தித்ததால் மக்கள் கங்கனாவின் மீது அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியை `வெளியே போ கங்கனா!" என்ற முழக்கங்களை எழுப்பி வெளிப்படுத்தினர்.அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனால் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் நடந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

    அப்போது பொது மக்களிடம் பேசிய கங்கனா ரனாவத்

    "நான் இங்குதான் வாழ்கிறேன், என் வீடும் நிலமும் இங்குதான் இருக்கிறது. நானும் நஷ்டத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய உணவகம் மூலம் வெறும் 50 ரூபாய் மட்டுமே வருமானம் வந்தது. ஆனால் நான் 15 லட்சம் ரூபாய் உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு மனுஷி தான். தயவு செய்து என்னை இங்கிலாந்து ராணி போல், உங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறவளாக தாக்க வேண்டாம். நானும் இங்குதான் வாழ்வை நடத்திக் கொண்டு இருக்கிறேன்," என கங்கனா கூறினார்.

    கங்கனா இதுபோல் கூறியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மழைக்காலப் பெருவெள்ளத்தால் ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது தொகுதியை மிகவும் அலட்சியமாக நடத்துவதாக மக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

    • நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
    • வீடியோக்கள் சமூகவ லைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) அனைத்தும் இம்மாதம் 9ஆம் தேதி நடந்த 'Awe Dropping' நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் அதன் சமீபத்திய ஹார்டுவேர் சாதனங்களைக் காட்சிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்த புதிய தயாரிப்புகள் இந்தியாவில் முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இப்போது, புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்போட்ஸ் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

    ஆப்பிளின் சமீபத்திய சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைத்தளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன.

    கூடுதலாக, அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கும்.

    இன்று விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விடிய, விடிய நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதனிடையே, நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். டெல்லி மற்றும் மும்பை ஆப்பிள் நிறுவனங்கள் முன்பு பல அடி தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது. 



    • அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .

    அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.

    அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத உயர்வை அறிவித்தார்.
    • மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை அறிவித்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார்.

    இந்தத் திட்டம் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட, பட்டப்படிப்பை முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

    முன்னதாக, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளையும் நிதிஷ் குமார் வெளியிட்டிருந்தார்.  

    • 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும்.
    • சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள்.

    மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி 2.0 எனக் கூறுகிறார்கள். முன்னதாக 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இனிமேல் 5 மற்றும 18 ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஆடம்பர கார்கள், பைக்குகள், சிகரெட் போன்றவற்றிற்கு 40 சதவீத வரியை அறிமுகம் செய்துள்ளது.

    இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த சீர்திருத்தம் வருகிற 22ஆம் தேதி முதல் அமல்படுத்த இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் வருகிற 22ஆம் தேதி முதல் ஷாப்பிங் செய்ய தொடங்குங்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    நேற்று டெல்லி மாநில அரசின் 1723 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை அமித் ஷா தொடங்கி வைத்தார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    தீபாவளி மற்றும் நவராத்திரி விரைவில் வரவிருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இனிமேல் 28 சதவீதம், 18 சதவீதத்திற்குப் பதிலாக 0 முதல் 5 சதவீதம் வரை கிடைக்கும். டெல்லியின் தாய்மார்கள், சகோதரிகள் வீட்டில் முதலாளியாக இருந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இன்னும் மேலும் மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்புகிறேன்.

    சுதந்திரமாக ஷாப்பிங் செய்யுங்கள். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் வாங்குங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொருட்களை வாங்காதீர்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை மட்டுமே வாங்குவதாக உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • இமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரணாவத் மணாலியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறது.
    • மேகவெடிப்பு, மழை வெள்ளத்தால் இமாச்சல பிரதேசம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. கனமழையுடன் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.

    வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.

    மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.

    மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.

    கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.

    ×