என் மலர்
இந்தியா
- ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆக இருந்த சராசரி பணவீக்கம் 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொடரும்.
* இதன் விளைவாக, STF விகிதம் 5.25% ஆகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.75% ஆகவும் உள்ளது.
* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தொடர பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்தது. இதன் விளைவாக இந்த ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் திருத்தப்பட்டு, ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7% ஆகவும், ஆகஸ்ட் மாதத்தில் 3.1% ஆகவும் இருந்து 2.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு Q4 மற்றும் அடுத்த ஆண்டு Q1 க்கான தலைப்பு பணவீக்கம் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது மற்றும் சாதகமற்ற அடிப்படை விளைவுகள் இருந்தபோதிலும் இலக்குடன் பரவலாக சீரமைக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கான முக்கிய பணவீக்கம் மற்றும் அடுத்த ஆண்டு Q1 கட்டத்திலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
- முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
- 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியால் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ADB தெரிவித்துள்ளது.
அதேபோல் 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி (Goods Exports) குறைந்தாலும், சேவை ஏற்றுமதி (Service Exports) வலுவாக இருக்கும் என ADB தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
- லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.
மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.
டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.
அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.
லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது.
தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?
லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது.
- பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை
உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்திற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் ஹாக்கி வீரரின் வீடு இடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
1980 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி இந்திய அணியில் விளையாடிய வீர்ர் முகமது ஷாஹித். இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 இல் அவர் உயிரிழநதார்.
ஷாஹித்தின் மூதாதையர் வீடு கராச்சி-சந்தாஹா சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை புல்டோசர்கள் மூலம் இடித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது , அது வெறும் வீடு மட்டுமல்ல, நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்திற்கு ஒரு சான்று என்றும் பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆசாத் சமாஜ் கட்சித் தலைவரும் எம்பியுமான சந்திரசேகர் ஆசாத், பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை என்றும் விமர்சித்தார்.
- ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி குறித்துதகவல் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.260.65 கோடி நிதி உதவி இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ரூ.260.65 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையுமே இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
- தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிகபட்டது.
- காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், "சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் பேரிடர் நிவாரண நிதி (PMNRF) இலிருந்து ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர்.
- பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அப்போது அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.
தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
- ரூபாய் 7,616-க்கான காசோலையில் பள்ளி தாளாளர் கையெழுத்திட்டுள்ளார்.
- Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக Saven Thursday six harendra sixty Rupees Only என எழுத்தியுள்ளார்.
Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்தற்குப் பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.
பள்ளி தாளாளர் ஒருவேரே இப்படி எழுதினால், பள்ளிக் குழந்தைகள் நிலை என்ன? என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- தொடர் பழக்கத்தால் மைனர் பெண் 3 மாதம் கர்ப்பம்.
- கருவை கலைக்க சொல்லி மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் ஆத்திரம்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் கருவை கலைக்க சொன்னதால் இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அந்த மைனர் பெண்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சதாம். இவர் அபன்பூர் என்ற இடத்தில் எம்.எஸ். என்ஜினீயரிங் அதிகாரியாக வேலைப் பார்த்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் 16 வயது வயது மைனர் பெண். இவருக்கும் முகமது சதாமுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த மைனர் பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன்னதினம் (செப்டம்பர் 28ஆம் தேதி) ராய்ப்பூருக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள லாட்ஜியில் இரண்டு பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து முகமது சதாம், இந்த மைனர் பெண்ணிடம் கருவை கலைத்துவிட வற்புறுத்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் சமதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது, கருவை கலைக்க சொல்கிறாயா? என ஆத்திரமடைந்த அந்த மைனர் பெண், காதலன் மிரட்டிய அந்த கத்தியை எடுத்து, காதலின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தை அறுத்ததுடன், அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். ரெயில்நிலையம் அருகே லாட்ஜ் சாவியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மகளிடம், எங்கு சென்றாய் என தாய் கேட்க, நடந்த விசயம் அனைத்தும் தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக தாய், மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்த அனைத்தும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மைனர் பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கருவை கலைக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். சதாம் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை, கருவை கலைத்துவிடு எனச் சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது.
- ஒட்டுமொத்த உலக நாடுகளும் போரை வேண்டாம் என இறங்கி வந்தன.
- போரை தொடங்க வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. மே மாதம் 7ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் நாடடிற்குள் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள், அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. தாக்குதல்களை இந்தியா திறம்பட எதிர்த்தது பதிலடி கொடுத்து வந்தது. இந்த சண்டை மே 10ஆம் தேதி வரை நீடித்தது. பின்னர் இருநாட்டு ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தை முடிவில் சண்டை முடிவுக்கு வந்தது.
ஆனால், வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் 3ஆவது நாடு தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே இந்திய எதிர்க்கட்சிகள் 3ஆவது நாடு தலையீட்டை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் டி.வி. விவாதத்தின்போது இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப. சிதம்பரம் 26/11 தாக்குதலின்போது போரை தொடங்க வேண்டாம் என்று அமெரிக்கா சொன்னதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
டி.வி. விவாதத்தின்போது "அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் காண்டலீசா ரைஸ் என்னிடமும், பிரதமரிடமும் (அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்) போரை தொடங்க வேண்டாம். ஆயுதம் மூலம் (போர்) பதிலடி கொடுப்பதை மறுபரிசீலனை செய்யுங்கள் எனத் தெரிவித்தார். ஆனால், நான் இது தொடர்பாக அரசு முடிவு எடுக்கும் எனக் கூறினேன். ஆனால், எனது மனதில் பதிலடி கொடுக்க வேண்டும் சிந்தனை ஓடியது. மொத்த உலகமும் இந்திய அரசிடம், போரை தொடங்க வெண்டும் எனத் தெரிவிக்க முன் வந்தது" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நுகர்வோர் விவகாரத்தறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "வெளிநாட்டு அதிகாரத்தில் 26/11 தாக்குதலின்போது அரசு தவறான கையாண்டது தொடர்பாக ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தெரிந்ததை, 17 வருடங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஒப்புக்கொண்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
- மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்தமுறை பலர் பதிவு செய்து உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5,870 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு (2026) மே மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஜித்தாவுக்கு நேரடியாக ஹஜ் பயணம் செல்லலாம் என்று சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அதேபோன்று மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5-ந்தேதியில் இருந்து 8-ந் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.






