என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
    • ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சிவராஜ் பாட்டீல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பணியாற்றினார்

    1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், நாடாளுமன்ற நூலகக் கட்டிடம் கட்டுதல், மக்களவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புதல் போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார். 

    • மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.
    • தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லத்தூரில்  வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    • அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது.
    • திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    புதுடெல்லி:

    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.

    அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.



    • கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    • தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர்.

    மண்டல, மகர விளக்கு சீசன் காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவொரு முன்பதிவும் இன்றி நேரடியாக வந்து பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைன் முன்பதிவு, உடனடி தரிசன முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சீசனில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவை நாடுவதில் ஆர்வம் காட்டினர். எனவே சீசனில் தொடக்கத்திலேயே பெரும்பாலான நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது.

    மண்டல பூஜைக்கு பிறகு நடைபெற உள்ள மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
    • னித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.

    37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    தனியார் பேருந்தில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பயணிகள் இருந்தனர். இந்தக் குழு புனித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு பேருந்து வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை வழியாகச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    • பாராளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது.
    • மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது.

    மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதில் மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி.க்களும் அடங்குவர்.

    இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாக கூறினார்.

    இதுபற்றி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்" என்றார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நடந்த 'வந்தே மாதரம்' விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஏன் 'வந்தே மாதர'த்தை நினைவுகூருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு 'வந்தே மாதரம்' மீதான காதல் ஒருநாள் மட்டும்தான்.

    மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகிறது. இருப்பினும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஊழல் மந்திரிகளை பாதுகாக்கும் ஒரு "கவச பாதுகாப்பு" இலாகாவை முதல்-மந்திரி தொடங்கி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
    • தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

    அப்போது, வழக்கு விசாரணயை தள்ளிவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    ஜனவரி 22-ந் தேதி வரை இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்த நீதிபதிகள், அதற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார்.
    • பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு வர்த்தக உறவு பற்றி பேசினர்.

    வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருநாடுகளின் உறவை இன்னும் விரிவுப்படுத்துவது பற்றி இருவரும் விவாதித்தனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டிரம்புடன் சுவாரஸ்மான உரையாடலை மேற்கொண்டேன். உரையாடல் சிறப்பானதாக இருந்தது. இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் பற்றி பேசினோம். பிராந்தியம் மற்றும் சர்வதேச நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என பதிவிட்டுள்ளார்.

    • அருணாச்சல் எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த கோர விபத்தில் 21 தொழிலாளர்கள் பலியாகினர்.

    இடாநகர்:

    அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் கில்லாபுக்ரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 22 பேர் ஒரு லாரியில் அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் ஹயுலியாங்கில் ஒரு விடுதி கட்டுமான பணிக்காகச் சென்றனர்.

    தொழிலாளர்கள் கடந்த 10-ம் தேதிக்குள் ஹயுலியாங் சென்றிருக்க வேண்டும். ஆனால் வரவில்லை என்பதால் காணவில்லை என அவர்களது கூட்டாளிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புத்தேஸ்வர் தீப் கொடுத்த தகவலின் பேரில் லாரியில் வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து ராணுவம், போலீசார், மாநில பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    மீட்புப்படையினர் விபத்தில் சிக்கிய 21 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். இவர்களில் 19 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 18 தொழிலாளர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடி நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.

    • மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
    • உங்கள் பெயரை நீக்கினால் சமையலறைப் பொருட்களுடன் தயாராக இருக்கும்படி பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா?

    தேர்தலின் போது டெல்லியில் இருந்து காவல்துறையினரை வரவழைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் அச்சுறுத்துவார்கள்.

    தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இருக்கின்றன அல்லவா?

    உங்களிடம் சக்தி இருக்கிறது அல்லவா? உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் அல்லவா?

    அப்போது பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.

    பெண்களா அல்லது பாஜகவா, யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.

    நான் மதவாதத்தை நம்புவதில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர முயற்சிக்கிறது என தெரிவித்தார்.

    • முதல் கட்டமாக டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார்.
    • இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதல் கட்டமாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியைச் சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளார்.

    தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக 17-ம் தேதி பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது

    2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

    ×