என் மலர்
இந்தியா

உங்கள் பெயரை நீக்கினால்: சமையலறை பொருட்களுடன் தயாராக இருக்க மம்தா வேண்டுகோள்
- மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
- உங்கள் பெயரை நீக்கினால் சமையலறைப் பொருட்களுடன் தயாராக இருக்கும்படி பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா?
தேர்தலின் போது டெல்லியில் இருந்து காவல்துறையினரை வரவழைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் அச்சுறுத்துவார்கள்.
தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இருக்கின்றன அல்லவா?
உங்களிடம் சக்தி இருக்கிறது அல்லவா? உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் அல்லவா?
அப்போது பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.
பெண்களா அல்லது பாஜகவா, யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.
நான் மதவாதத்தை நம்புவதில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர முயற்சிக்கிறது என தெரிவித்தார்.






