என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
- 17 வயது சிறுமியை லோகநாதன்(20)என்ற வாலிபர் திருமணம் செய்துள்ளார்.
- வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த லோகநாதன்(20)என்ற வாலிபர் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த தகவல் திருப்பூர் சைல்டுலைன் டிரஸ்ட் அமைப்பினருக்கு கிடைத்தது. இதையடுத்து சிறுமி மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை செய்த அவர்கள், சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story