search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தர மறுத்ததால் தூய்மை பணியாளரை கொன்ற வாலிபர் கைது
    X

    கோப்பு படம்

    பெண் தர மறுத்ததால் தூய்மை பணியாளரை கொன்ற வாலிபர் கைது

    • கடந்த மாதம் 20-ந்தேதி தூய்மைப்பணியாளர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
    • தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் அன்னம்மாள்(55). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் 3-வது மகளுடன் தனியாக வசித்து வந்தார். தற்காலிக தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த மாதம் 20-ந்தேதி அதேபகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவரை தலையில் கல்லைபோட்டு மர்மநபர் கொலை செய்து விட்டு தப்பிஓடியது தெரியவந்தது.

    ஒரு மாதமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினரும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஆயக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கனகராஜ்(32) என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரித்தனர். தனியார் மில்லில் வேலை பார்த்துவரும் இவருக்கு திருமணமாகிவிட்டது.

    இருந்தபோதும் அன்னம்மாளின் 3-வது மகளை மணம் முடிக்க பெண்கேட்டுள்ளார். ஆனால் அன்னம்மமாள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைபோட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் கனகராைஜ கைது செய்தனர்.

    Next Story
    ×