search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே சொத்து தகராறில் சகோதரியை தாக்கிய வாலிபர் கைது
    X

    கோப்பு படம்

    தேனி அருகே சொத்து தகராறில் சகோதரியை தாக்கிய வாலிபர் கைது

    • தேனி அருகே சொத்து தகராறில் வாலிபர் சகோதரியை சரமாரியாக தாக்கியதால் அவர் படுகாயமடைந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள மதுராபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி பரமேஸ்வரி (வயது22). இவர்கள் திருப்பூரில் இருந்து பனியன் துணி வாங்கி வந்து தைத்து கொடுக்கும் வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த 2 வருடத்திற்கு முன்பு பரமேஸ்வரியின் தந்தை பெயரில் இருந்த வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தனது ேதவைக்காக ரூ.50 ஆயிரம் எடுத்துக் கொண்டார்.

    மீதி பணத்தை தனது சகோதரர் பாண்டீஸ்வரனுக்கு தருவதாக கூறி உள்ளார். ஆனால் அந்த பணத்தையும் தராமல் அவர் வைத்துக் கொண்டுள்ளார். இதனால் அண்ணன் தங்கை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பரமேஸ்வரியை கல்லால் சரமாரியாக தாக்கி பாண்டீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×