search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் கட்டிடம் அகற்றப்படுமா?
    X

    ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம்.

    ஆபத்தான நிலையில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் கட்டிடம் அகற்றப்படுமா?

    • நீண்ட நாட்களாக பயன்படுத்தாத நிலையில் கட்டிடம் பழுதடைந்தது.
    • பொதுமக்களின் கழிப்பிடமாகவும் மாறிய நிலையில் கட்டிடம் முழுமையாக அகற்றப்பட்டது.

    நன்னிலம் :

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் பொதுப்பணி–த்துறைக்கு சொந்தமான குடியிருப்பு வளாகங்கள் திருவாரூர் மெயின் ரோட்டில் அமைந்திருந்தன.

    இவ்வளாகம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாத நிலையில் கட்டிடம் பழுதடைந்தது. சமூக விரோத செயல் நடைபெறும் இடமாகவும் மாறிய நிலையில், சமூக விரோதிகளால் கட்டிடத்தில் இருந்த ஜன்னல் நிலை, வயரிங் பொருட்கள் களவாடப்பட்டது.

    மேலும் பொதுமக்களின் கழிப்பிடமாகவும் மாறிய நிலையில் கட்டிடம் முழுமையாக அகற்றப்பட்டது.

    ஆனால் குடியிருப்பு வளாகத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்காக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்தக் கட்டிடம் மட்டும் அகற்றப்படாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

    பொதுப்பணித்துறை வாகனங்கள் நிறுத்தும் கட்டிடத்தின் தன்மையானது ஆர்.சி.சி கட்டிடம் ஆகும். சுவர்கள் அகற்றப்பட்டு, ஆர் சி சி கட்டிடம் அந்தரங்கத்தில் தொங்குவது ஆபத்தானதாகும்.

    மேலும், பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகம் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

    விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் காலை- மாலை நேரங்களில் வந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை வளாகத்தில் அகற்றப்படாமல் இருக்கும் ஆபத்தான மேற்கூரை மீது மாணவர்கள் ஏறினாலோ, மேற்கூரையை பிடித்து தொங்கினாலோ விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    குடியிருப்பு வளாகங்களை அகற்றிய பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாகனம் நிறுத்தும் கட்டிடத்தை மட்டும், அகற்றாமல் விட்டுச் சென்றனர் என்ற கேள்வியை பொது மக்கள் எழுப்பி வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை வளாகம் அருகில் பள்ளி மாணவ -மாணவிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு அதிகம் வந்து செல்வதால், விபத்து நிகழாவண்ணம், இருக்க வாகனம் நிறுத்தும் கட்டிடத்தை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×