என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது மரம் முறிந்து விழுந்து பெண் பலி
- சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து பைக்கில் அமர்ந்து வந்த ஜோதி மீது விழுந்தது.
- அவருக்கு கை மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது.
அரூர்
அரூர் அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மனைவி ஜோதி (வயது 46).
இருவரும் கடந்த, 6-ந்தேதி, திருவண்ணாமலை மாவட்டம், அத்திப்பாடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
கோட்டப்பட்டி பகுதியில் கோபால்சாமி என்பவரின் நிலத்தின் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து பைக்கில் அமர்ந்து வந்த ஜோதி மீது விழுந்தது.
இதில், அவருக்கு கை மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story