search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் கட்டி முடித்த 2 மாதங்களில் உடைந்து போன சாக்கடை பாலம்
    X

    திருச்சியில் கட்டி முடித்த 2 மாதங்களில் உடைந்து போன சாக்கடை பாலம்

    • அய்யப்ப நகர் நேதாஜி தெரு முழுவதும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மற்றும் குறுக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • இலுப்பூர் சாலை மற்றும் நேதாஜி தெரு சந்திப்பில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி உடைந்து மழைநீர் வடிகாலுக்குள் விழுந்தது.

    திருச்சி :

    திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு தெருக்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்ப நகர் நேதாஜி தெரு முழுவதும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மற்றும் குறுக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த பணி நிறைவு பெற்று சுமார் இரண்டு மாத காலத்தில் இலுப்பூர் சாலை மற்றும் நேதாஜி தெரு சந்திப்பில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி உடைந்து மழைநீர் வடிகாலுக்குள் விழுந்தது. இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு தற்போது சீர் செய்யப்பட்டு வருகிறது.

    பாலம் அமைக்கப்பட்டு இரண்டு மாத காலத்தில் உடைந்து விழுந்ததால் மக்களின் வரிப்பணம் ரூ.25 லட்சம் வீணடிக்கப்பட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள். எந்தவித பலமுமின்றி பெயரளவிற்கு பாலம் கட்டப்படிருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×