search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி பாலியல் வன்கொடுமை-2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சிறுமி பாலியல் வன்கொடுமை-2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • திருச்சியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவில் பதிவு செய்த 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
    • பிரகாஷ், பரத் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என விசாரணையில் தெரியவந்தது

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதில் இருந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    கடந்த 8.6.2022 அன்று திருச்சி பஞ்சப்பூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும், அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதில் உரிய விசாரணை நடத்தி பிரகாஷ் (வயது 22), பரத் (21) ஆகியோரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் கைதான பரத் என்பவர் மீது ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    எனவே பிரகாஷ், பரத் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மேற்கண்ட இருவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், பிரகாஷ், பரத் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையை சமர்ப்பத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

    Next Story
    ×