search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவண்டாகுறிச்சியில் மன நல காப்பகம், சமூக பராமரிப்பு மையம் - கனிமொழி திறப்பு
    X

    கோவண்டாகுறிச்சியில் மன நல காப்பகம், சமூக பராமரிப்பு மையம் - கனிமொழி திறப்பு

    • மன நல காப்பக, சமூக பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    • மனநல ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பாலிசியை முதல்வர் உருவாக்குவதாக தகவல்

    டால்மியாபுரம் ,

    திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பேனியன் அகாடமியின் மன நல காப்பகம் மற்றும் பராமரிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அதன் இயக்குனர் கிஷோர் குமார் வரவேற்றார். மீண்டும் இல்லம் என்ற தலைப்பில் ஜாக்லின் கலந்துகொண்டு பேசினார். மீண்டும் இல்லம் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய மற்றும் மனநலம் என்ற தலைப்பில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையர் தரேஷ் அகமதுவும், மனநல ஆரோக்கியத்திற்கான சூழல் நிறைந்து திருச்சி என்ற தலைப்பில் கலெக்டர் பிரதீப்குமாரும் பேசினர்.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மனநல காப்பக மற்றும் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-மன நிலை பாதிப்புக்கு எந்த வரையறைகளும் கிடையாது. யார் எந்த இடத்தில் பாதிக்கப்படுவார்கள், எங்கே பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியாது. இன்றைக்கு மன நலம் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் , அரசாங்கமும் முக்கியமாக எடுத்து கையாள வேண்டி உள்ளது. அதற்கு முக்கியம் அளித்து ஒரு பாலிசியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக மனநல ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பாலிசியை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அதற்காக ஒரு திட்டத்தை வகுத்து செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் அடிக்கடி கூறுவது திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையானது.நம்முடைய ஆட்சியில் யாருமே விடுபடாமல் எல்லோருக்கும் காக்க கூடிய கரங்கள் நீளும் என்ற அந்த நம்பிக்கையை தரக்கூடிய ஒன்றாக மாற வேண்டும், மனநலம் பாதித்தவர்கள் சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து தன்னிச்சையோடு வாழக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் அதற்கு நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் உறுதுணையாக இருப்பார் என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித் குமார், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி , ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் ஆலிஸ் செல்வராணி, கல்லக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் துரை, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி கருணாநிதி, ஆதி நாயகி ரவி, ஒன்றிய செயலாளர்கள் புள்ளம்பாடி தெற்கு இளங்கோவன், வடக்குசெல்வராசா லால்குடி சண்முகநாதன், சக்திவேல், நெடுஞ்செழியன், நகர செயலாளர் முத்துக்குமார், கோவண்டாகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி, பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராகாந்தி மற்றும் பேனியல் நிர்வாகத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×