search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி செளடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் மாணவர்களுக்கான தலைமை பதவியேற்பு விழா
    X

    திருச்சி செளடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் மாணவர்களுக்கான தலைமை பதவியேற்பு விழா

    • அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல் வேண்டும்

    திருச்சி;

    திருச்சி மாவட்டம் சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீபள்ளியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லெப்டினல் கர்னல் அஜய்குமார் மற்றும் திருச்சி ஜி ஹெச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி செயலாளர் செந்தூர் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் , எதிர்கால சந்ததியினர் பள்ளி பருவத்திலேயே பிறரை தனக்கு சமமாக பாவித்தல், பாராட்டுதல், கண்டிப்பு, சரியான பாதையில் மாணவர்களை அழைத்துச் செல்லுதல், அவரவர் திறமை உணர்ந்து வேலைகளை பகிர்ந்து அளித்தல், எந்த சூழ்நிலையிலும் தானும் களத்தில் இறங்கி வேலை செய்தல் போன்ற தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    மாணவர்களுக்கான தலைவர் ஜாகிர் அகமதும், மாணவிகளுக்கான தலைவர் ஆன்டோட்ரியாவும், மாணவர் விளையாட்டுத் தலைவர் முகமது ரிலாவும், மாணவி விளையாட்டு தலைவி அஷ்விதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வி ஆலோசகர் சிவகாமி ஜெயக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கல்வி ஆலோசகர் உறுதிமொழி கூற மாணவர்களுக்கு உற்சாகத்துடன் உறுதிமொழி ஏற்றனர்.

    மேலும் பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ள கிரிம்சன் , ப்ளூபெல்ஸ், ஜினியா, ட்ேபாடில் நிர்வாகிகள் தங்கள் இல்ல கொடிகளை ஏந்தி கம்பீரமாக அணிவகுத்து வந்து பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

    காவல் ஆய்வாளர் தனது சிறப்புரையில், திருச்சி நகரில் வைரம் போல் மிளிர்கின்ற ஒரு பள்ளி சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா பள்ளி என்றும், அங்கு பயிலும் மாணவர்களும் வைரம் போல் மிளிர்வதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

    லெப்டினன்ட் கர்னல் சிறப்புரையில் ஆளுமை திறமை பள்ளி வயதினிலே பெறுவது பெருமைக்குரியது என்றார்.

    Next Story
    ×