search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி, கரூர் நீட் தேர்வில் 9,499 மாணவ, மாணவிகள்
    X

    திருச்சி, கரூர் நீட் தேர்வில் 9,499 மாணவ, மாணவிகள்

    • 14 மையங்களில் நீட் தேர்வு
    • முழுக்கை சட்டை, பெல்ட், தோடு அணிய அனுமதி மறுப்பு

    திருச்சி,

    இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.திருச்சி மாவட்டத்தில் பூலாங்குளத்துப்பட்டி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரி, பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி, புத்தூர் பாரதிநகர் காவேரி குளோபல் பள்ளி, திருச்சி கமலா நிகேதன் பள்ளி, துறையூர் மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, சிறுகனூர் எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரி, பெல் டவுன்ஷிப் ஆர்.எஸ்.கே. பள்ளி, ஏர்போர்ட் எஸ். பி.ஐ.ஓ.ஏ. பள்ளி, திருச்சி கேந்திர வித்யாலயா, தோளூர்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக்,காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளி ஆகிய மொத்தம் 12 மையங்களில் 7,799 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆகவே காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர்.செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் எடுத்து வரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கரூரில் இரு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், இன்று நீட் தேர்வு நடக்கிறது. அதில் 1,700 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×