search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓராண்டில் 12.25 லட்சம் அஞ்சலக புதிய சேமிப்பு கணக்குகள்
    X

    ஓராண்டில் 12.25 லட்சம் அஞ்சலக புதிய சேமிப்பு கணக்குகள்

    • ஓராண்டில் 12.25 லட்சம் அஞ்சலக புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக அதிகாரி தகவல்

    திருச்சி:

    திருச்சி மண்டல தபால் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் கூறியதாவது:

    சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் சேவையாற்றுவதில் அஞ்சல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. சாமானிய மனிதர்களுடன் தொடர்புடைய சேவைகளாகிய ஆதார், செல்வமகள் சேமிப்பு கணக்குகள், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்குகள் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சேவை ஆகியவற்றை தபால் அலுவலகங்கள் சிறப்பாக வழங்கி வருகிறது.

    திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைன் சேவைகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தபால் சேவைகளை எளிதில் பெற வசதி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2021-22 ஆம் நிதி ஆண்டில் திருச்சி அஞ்சல் மண்டலத்தில் 12.25 லட்சம் புதிதாக அஞ்சலக சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு அகில இந்திய அளவில் திருச்சி மண்டலம் முதலிடம் பெற்றது. குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டது.

    தற்போதைய 2022-23 ஆம் நிதி ஆண்டில் ஜூலை மாதம் வரை 30 ஆயிரத்து 745 பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், மூத்த குடிமக்களுக்காக நடத்தப்பட்ட அகவை 60 அஞ்சல் 20 சிறப்பு முகாம்கள் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் இந்த ஆகஸ்ட் 12-ந் தேதி வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் ஒரு லட்சம் இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×