search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
    X

    நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகுசவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்.

    தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

    • சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் கொடைக்கானல் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தை அனுமதி இல்லாத தனியார் காட்டேஜ்களில் வசூலிப்பது தொடர்கதையாக உள்ளது.

    கொடைக்கானல்:

    தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.கொடைக்கானல் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன.நேற்று காலை முதலே அதிகமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர்.

    இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தொடர் விடுமுறையால் அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போலீசார் பற்றாக்குறையால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

    போலீசாருக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாகவே கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தும் இதுவரைஅந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    கொடைக்கானல் நகர் முழுவதும் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில்அதிகமான சுற்றுலா பயணிகள் கூடும் வேளையில் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது வாடிக்கையாக உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் கூடும் வேளையில் முறையானஅனுமதி இல்லாத தங்கும் விடுதிகளில்கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தை அனுமதி இல்லாத தனியார் காட்டேஜ்களில் வசூலிப்பது தொடர்கதையாக உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×