search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
    • விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை கொண்டது.

    அதன்படி 2023-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளை–ஞர் விருது வரு–கிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விரும்புபவர்கள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 1-4-2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31-3-2023 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    கடந்த 1-1-2022 முதல் 31-3-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் வருகிற மே மாதம் 31-ந் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம். www.sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×