search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீரை பண்ணைக்குட்டை அமைத்து  தேக்கி வைக்க வேண்டும் - வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்

    மழைநீரை பண்ணைக்குட்டை அமைத்து தேக்கி வைக்க வேண்டும் - வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும்.
    • மழை எதிர்பார்க்கப்படுவதால் விவசாய நிலங்களில், நீர்பாசனம் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும்.

    உடுமலை,ஜூன்.22-

    தமிழகத்தின் பல இடங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. வழக்கம் போல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல இடங்களில் வெள்ளம் வடியாமல் கூட தேங்கியிருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு இடையே தான், வாகனங்களை ஓட்டினர். வரும் நாட்களில் மழை தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சம்மந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில், மழை எதிர்பார்க்கப்படுவதால் விவசாய நிலங்களில், நீர்பாசனம் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும். பயிர்களுக்கு போதிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். அதிகளவிலான மழைநீரை பண்ணைக்குட்டை அமைத்து அதில் தேக்கி வைக்க வேண்டும்' என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×