search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரிவிலக்கு சலுகையை கூடுதலாக 4 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - ஜவுளித்துறையினர் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரிவிலக்கு சலுகையை கூடுதலாக 4 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - ஜவுளித்துறையினர் வலியுறுத்தல்

    • பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரிவிலக்கு சலுகையை கூடுதலாக நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றனர்.
    • இறக்குமதியில் 14 லட்சம் பேல் என 397.87 லட்சம் பேல் பருத்தி இருப்பு கிடைக்கு மென கணக்கிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தொழிலை பாதுகாக்கும் வகையில் பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரியை நீக்கிய பின் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு கட்டுக்குள் வந்தது. இந்தாண்டில், பருத்தி தட்டுப்பாடு ஏற்படாமல் உள்நாட்டு தேவைகள் பூர்த்தியாக வேண்டுமென திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

    நடப்பு ஆண்டுக்கான பருத்தி பயன்பாடு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆரம்ப இருப்பாக 71.84 லட்சம் பேல் பஞ்சு கையிருப்பு இருக்கும். நடப்பாண்டு வரத்தாக 312.03 லட்சம் பேல், இறக்குமதியில் 14 லட்சம் பேல் என 397.87 லட்சம் பேல் பருத்தி இருப்பு கிடைக்கு மென கணக்கிடப்பட்டுள்ளது.

    நூற்பாலைகள் பயன்பாட்டுக்கு 280 லட்சம் பேல்,சிறு, குறு நிறுவனங்களுக்கு 20 லட்சம், ஜவுளி அல்லாத பயன்பாட்டுக்கு 16 லட்சம், ஏற்றுமதிக்கு 43 லட்சம் என மொத்த பயன்பாடு 359 லட்சம் பேல் அளவுக்கு இருக்கும் எனவும், 38.87 லட்சம் பேல் பஞ்சு இறுதி கையிருப்பாக இருக்குமெனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் ஜவுளி தொழில்துறையினர் கூறுகையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பருத்தி இருப்பு பட்டியல் புள்ளிவிவரப்படி, உள்நாட்டு தேவைக்கான பஞ்சு தடையின்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இருப்பினும் பஞ்சு பதுக்கலை தடுக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரிவிலக்கு சலுகையை கூடுதலாக நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×