search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளிர்ந்த காற்று வீசுவதால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு
    X

    கோப்புபடம். 

    குளிர்ந்த காற்று வீசுவதால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு

    • வெளியூர்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
    • வெளியூர்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை உலர் களங்கள் அதிக அளவில் உள்ளன. மழை நாட்கள் குறைவு, அதிக வெயில் ஆகியவை சாதகமாக உள்ளதால் இங்கு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கொப்பரை உற்பத்தி நடக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அடை மழை பெய்யும் சமயங்களில் மட்டும் கொப்பரை உற்பத்தி தடைபடுவது வழக்கம்.

    கொப்பரை உலர் களங்களில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கிய போதிலும் இப்பகுதியில் மழை இல்லை.ஆனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இங்கு பலத்த காற்று வீசுகிறது. அடிக்கடி மேக மூட்டம் ஏற்படுகிறது. குளிர் காற்று வீசுகிறது.இதனால் வெயில் குறைந்து விடுகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் கொப்பரை உலர்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

    இந்தாண்டு தேங்காய் வரத்து அதிகரித்து கொப்பரை உலர் களங்கள் முழு வீச்சில் இயங்கி வந்த நிலையில், இயற்கை ஒத்துழைக்காததால் கொப்பரை உற்பத்தி சுணக்கமடைந்துள்ளது.இதுகுறித்து கொப்பரை உலர்கள உரிமையாளர்கள் கூறுகையில், கொப்பரை உற்பத்தியை முன்பு போல் விறுவிறுப்பாக செய்ய முடியவில்லை. கொப்பரை உற்பத்தி பாதிப்பால் விலை உயரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கிலோ 80 ரூபாய் என்ற நிலையிலேயே உள்ளது என்றனர்.

    Next Story
    ×