search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-ஜெய்ப்பூர் ரெயில் கூடுதலாக 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு
    X

    கோப்புபடம்.

    கோவை-ஜெய்ப்பூர் ரெயில் கூடுதலாக 2 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு

    • வெள்ளியன்று, கோவையில் புறப்படும் ெரயில் ஞாயிறு அன்று காலை ஜெய்ப்பூர் சென்றடையும்.
    • சன்ட்ஹிர்தரம்நகர் நிலையத்திலும், விக்ரம்கர்ஹ்ஹலாட் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் 6 மாதங்களுக்கு நின்று செல்லும்.

    திருப்பூர் :

    கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் மத்திய பிரதேச மாநிலத்தில் கூடுதலாக இரு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:12969) இயக்கப்படுகிறது. வெள்ளியன்று, கோவையில் புறப்படும் ரெயில் ஞாயிறு அன்று காலை ஜெய்ப்பூர் சென்றடையும்.

    மறுமார்க்கமாக செவ்வாய்க்கிழமை புறப்படும் ரெயில் வியாழன் மாலை கோவை வந்தடைகிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.

    இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபால் - செேஹார் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சன்ட்ஹிர்தரம்நகர் நிலையத்திலும், நாக்டா -ஷம்கர்ஹ் நிலையங்களுக்கு இடையே உள்ள விக்ரம்கர்ஹ்ஹலாட் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் அடுத்த 6 மாதங்களுக்கு (அதாவது செப்டம்பர் 11 வரை) நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×