search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி ஊராட்சி வாக்கு எண்ணிக்கை
    X

    வாக்கு எண்ணிக்கை மையம்.

    ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி ஊராட்சி வாக்கு எண்ணிக்கை

    • 8 மணிக்கு தொடங்கியது
    • 14 மலை கிராமங்கள் உள்ளது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீட்டில் மாற்றிய மலைவாழ் பெண்ணுக்கு பதிலாக ஆதி திராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது.

    கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்த இந்துமதி என்கின்ற பெண் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மற்ற வார்டுகளுக்கு கடந்த 9-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி வார்டு நாயக்கனேரி ஊராட்சியில் 14 மலை கிராமங்கள் உள்ளன.

    மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2 பெண்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க. சார்பில் இந்துமதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

    அவருக்கு அ.தி.மு.க. சார்பில் ஏபி பார்ம் கிடைக்காத காரணத்தால் சுயாட்சியாக க சின்னத்தில் போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் விஜயலட்சுமி என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

    9 ஊராட்சி வார்டுகளில் 8,9 ஆகிய வார்டுகளில் மட்டும் தலா 2 பெண்கள் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தார். மீதம் உள்ள 7 வார்டுகளில் யாரும் மனு தாக்கல் செய்யாதால் தேர்தல் நடக்கவில்லை.

    மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கலீல் தலைமையில் வாக்குகள் எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. நாயக்கனேரி ஊராட்சி 8,9 வார்டு ஓட்டுகள் எண்ணப்பட்டது.

    இதில் 8-வது வார்டில் நதியா (234 வாக்கு) 9-வது வார்டில் சுசிலா 1308 வாக்கு பெற்று வெற்றி பெற்றனர்.

    Next Story
    ×