search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை
    X

    கோப்புப்படம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை

    • ஒரு வாரமாக 100 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் வெப்பம் தணிந்தது.
    • பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

    கத்திரி முடிந்த பிறகும் வெப்பம் கடுமையாக இருந்தது. ‌ இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் இடியுடன் கன மழை பெய்தது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விளம்பர பேனர்கள், கூரைகள் காற்றில் பறந்தது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆம்பூர் 21.20, ஆம்பூர் சக்கரை ஆலை பகுதி 26.40, ஆலங்காயம் 18.20, வாணியம்பாடி 26, நாட்டறம்பள்ளி 6 ,திருப்பத்தூர் சக்கரை ஆலை பகுதி 2, திருப்பத்தூர் 5.70.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×