search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 ஆயிரம் மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது
    X

    மாத்திரையில் இருந்த காம்பியை படத்தில் காணலாம். மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை நடத்தினார்.

    24 ஆயிரம் மாத்திரைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது

    • சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி இருந்ததால் நடவடிக்கை
    • நாட்டறம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரு டைய 7 வயது மகள் மோனிகாவுக்கு நேற்று முன் தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    உடனே வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு சிறுமியை பரிசோ தித்த டாக்டர்கள், காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சிறுமிக்கு கொடுப்பதற்காக மாத்தி ரையை உடைத்தபோது அதில் கம்பி இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த டாக்டரிடம் முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செந்தில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு மாத்திரை வழங் கினார். இதனை பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் மற் றும் உறவினர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில் குமார் கூறுகையில்:-

    வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருந்து கிடங்கில் இருந்து பாராசிட்டமல் மாத்திரைகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளது.

    அதில் சிறுமிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி இருந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வெலக்கல்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலுவை யில் இருந்த 24,023 மாத்திரைகளும் வேலூரில் உள்ள தமிழ் நாடு அரசு மருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    மாத்திரைகள் தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×