search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்
    X

    காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது எடுத்த படம்.

    அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்

    • 54 பேர் உயிர்தப்பினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை :

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதியிலிருந்து சேலம் நோக்கி சென்ற விரைவு சொகுசு பேருந்து நிலை தடுமாறி சாலையில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமார் 54 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு ஏதுமின்றி சிறு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

    அரசு சொகுசு பஸ் விபத்து

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அடிப்பட்டவர்களை அங்கிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    19 பேர் படுகாயம்

    நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா (வயது 18) ) பாரதி (25) சந்துரு (21) திக் ஷா ஸ்ரீ (2) சந்துரு (21) தனலட்சுமி (60) ரேவநாத் (26) சேலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (25) கணேசன் (56) சமுத்ரா (12) கிரிஜா (33) ஈரோடு சேர்ந்தவர்கள் ராமலிங்கம் (48) ஜிவா (20) சேகரன் (42) சாந்தி (47) இளங்கோவன் (42) ஓமலூர் கேசவன் (26) அம்மாம் பேட்டை தியாகராஜன் (வயது 68) மற்றும் டிரைவர் சக்திவேல் கண்டக்டர் கணேசன் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×