என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    திருச்சி விமான நிலையத்திற்கு பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்பட்டபோது அதிக அளவிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தற்போது பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் குறைந்து இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அப்போது அந்த விமானத்தில் பேங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பொருட்கள் இருந்ததை கண்டறிந்து அதனை சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 9.82 கோடி இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து அவரிடம் தொடர்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை மீண்டும் சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து அரிய வகை உடும்புகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனைக்கு பின்பு அந்த உடும்பானது மீண்டும் கோலாலம்பூருக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
    • தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    திருச்சி:

    அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

    மொழி விவகாரத்தில் யாரும் கமல் மன்னிப்பு கேட்பதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம் எல்லாம் வந்தது. அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.

    மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .

    தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17-ந்தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திருச்சி மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் ரூ.18.4 கோடியில் கட்டப்பட்ட உயர்நிலைப்பள்ளி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    * தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான்.
    • பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.

    சமயபுரம்:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்துக்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மஹாத்மியம், சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிதாக கட்டப்படவுள்ள கோவிலின் 7 பிரகாரங்களை கொண்ட மாதிரி வடிவமைப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர், ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யதுகிரி யதிராஜமடம் 41-ம் பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட, அதனை தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார்.

    பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரியம், தர்மம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

    திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் அஜெண்டா.
    • இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்த நிதியாண்டில் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள்.

    தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம். காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் கூறினார்.

    இருந்த போதும் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினோம். பா.ஜ.க தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது.

    தமிழ்நாட்டு அரசு மீதும், அமைச்சர்கள் மீதும், அரசு துறைகள் மீதும் தொடர் தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

    மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம். எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக மத்திய அரசு ?

    பா.ஜ.க விற்கும் அ.தி.மு.க.விற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகிறார்கள். கலவர பூமி ஆக்குவது தான் அவருடைய நோக்கமாக உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால் பா.ஜ.க. தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி.

    பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால் ஜாதி அடையாளத்தோடு யு.பி.எஸ்.சி. தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே.

    மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் அஜெண்டா. அதைதான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

    இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது எக்கு கோட்டை போல் உறுதியான கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
    • வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்.

    திருச்சி:

    தமிழக துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று முன்தினம் திருச்சி வந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மலை அணிவித்தார். பின்னர் புதுக்கோட்டை சென்ற அவர் கந்தர்வகோட்டையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து, அங்குள்ள மங்களமேடு பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்த உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் 1,175 பயனாளிகளுக்கு ரூ.40,05 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    மாலையில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து உரையாடினார்.



    இதையடுத்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் நடைபெற்ற சமூக நீதி பாசறை கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரவு திருச்சிக்கு வந்தார். திருச்சியில் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அவர் பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் திருச்சியில் இரவு தங்கி ஓய்வெடுத்த அவர் இன்று திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கருணாநிதி பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞர் அணியினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்களை வீடு வீடாக கொண்டு மக்களிடம் தெரிவிக்க வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு இளைஞர் அணியினர் பாடுபடவேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க. மாவட்ட, மாநகர இளைஞர் அணி, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் சுமார் 567 பேர் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல், கே.வி.பிரகாஷ் எம்.பி., இன்பா ரகு, இளையராஜா, அப்துல்மாலிக், ஜி.பி.ராஜா, சீனிவாசன், பிரபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    • அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.
    • யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.

    தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும், நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு, கடமை.

    பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு கவர்னர் மூலமாக நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை. ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.

    பா.ஜ.க., தி.மு.க.வோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் வெளிப்படுகிறது. தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார். கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல. அதில் என்ன ஐயம் இருக்கிறது என்றால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

    அவ்வாறின்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு, மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார்.
    • பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் அவந்திகா (9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகள் 2 பேரும் நேற்று வீட்டில் இருந்தனர். பெற்றோரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது அவந்திதா மதிய நேரத்தில் வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டார். அதற்கு லோகேஷ், வெயில் கடுமையாக இருப்பதால் இப்போது வெளியே சென்று விளையாட வேண்டாம். மாலையில் பொழுது சாய்ந்ததும் போய் விளையாடு என கூறியதாக தெரிகிறது.

    உடனே தந்தையிடம் கோபித்துக்கொண்டு அந்த சிறுமி தனது அறைக்கு சென்று உள்ளார். பெற்றோரும் மகள் சாதாரணமாக கோபித்துக் கொண்டு சென்றிருக்கலாம் என கருதினர். பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று மதிய உணவு சாப்பிட மகளை அழைத்தனர். அப்போது அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பலமுறை கூப்பிட்ட பின்னரும் மகள் குரல் கொடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த லோகேஷ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார். ஆசை மகள் அவந்திதா தனது துப்பட்டாவில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவளை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    9 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோகேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு?
    • அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால்தான் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார்.

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரிக்க தடை விதித்த உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    * நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? பாராளுமன்றம் எதற்கு?

    * அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால்தான் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்.

    * 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்தாண்டு மட்டும் செல்வது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிஷாலினி ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் அவர் கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடி பெயர்ந்துள்ளார்.

    அங்கு 2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் நிஷாலினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரது இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எம்பலூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52), துபாய் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சேர்ந்த அப்துல் ரபீக்(49) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை.
    • வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்சியில் 31-ந் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க. அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

    இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும்.

    தி.மு.க. இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.

    அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை.

    அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

    தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
    • தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை தொடங்கியது.

    தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி வரை சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோன்று புறநகர் பகுதிகளான லால்குடி சமயபுரம் மணப்பாறை மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக இரவு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1060.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக மழை அளவு விபரம் வருமாறு;-

    கல்லக்குடி 107.4, லால்குடி 30.4, நந்தியாறு அணைக்கட்டு 67.4, புள்ளம்பாடி 116, தேவி மங்கலம் 20.2 சமயபுரம் 36.4, சிறுகுடி 40, வாத்தலை அணைக்கட்டு 11.8, மணப்பாறை 24.4, பொன்னணியாறு அணை 4, கோவில்பட்டி 52.4, மருங்காபுரி 43.4 முசிறி 15, புலிவலம் 8, தாப்பேட்டை 20, நவலூர் கொட்டப்பட்டு 31, துவாக்குடி 14, கொப்பம்பட்டி 27, தென்பர நாடு 40, துறையூர் 52, பொன்மலை 77.2, திருச்சி ஏர்போர்ட் 96.6, திருச்சி ஜங்ஷன் 66, திருச்சி டவுன் 60.

    ×