திருச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் போராட்டம்

அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் திடீர் போராட்டம்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது . உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . பின்னர் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தினை போலி பட்டா மூலமாக பிளாட் போட்டு விற்பனை செய்ததை கண்டித்தும், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைந்திருக்கும் காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க வலியுறுத்தியும் அலுவலக பூட்டை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் வெளியில் நின்ற உதவி கலெக்டர் காரின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com