search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

    • மெயினருவியின் 2 கிளைகளிலும், ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் விழுகிறது.

    தென்காசி:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை லேசான வெயில் அடித்த நிலையில் மதியம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 31 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் பாளை, நெல்லை, மணிமுத்தாறு, கன்னடியன் கால்வாய் பகுதி, அம்பை உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் மாலையில் மழை பெய்தது. ஆலங்குளம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் தென்காசி, ஆய்க்குடி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு இன்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    மெயினருவியின் 2 கிளைகளிலும், ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் விழுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளத்தில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கழுகுமலை, காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி, வைப்பாறு, சூரன்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    Next Story
    ×