search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 18 ஆயிரத்து 600 கன அடியாக குறைப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 18 ஆயிரத்து 600 கன அடியாக குறைப்பு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதனால் 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து பாறைகள் வெளியே தெரிகிறது. 37 நாட்களுக்கு பிறகு ஒனேக்கலில் பரிசல் இயக்க நேற்று முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வழியாக பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ஆற்றில் குளிக்க தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 600 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என மொத்தம் 18 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள்.

    Next Story
    ×