என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாலிகிராமத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.94 ஆயிரம் மோசடி
  X

  சாலிகிராமத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.94 ஆயிரம் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி ஹீனா விர்வானி.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  போரூர்:

  சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி ஹீனா விர்வானி. இவர் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வேலை சம்பந்தமாக வந்த விளம்பரம் ஒன்றில் இருந்த செல்போன் எண்ணிற்கு அவர் தொடர்பு கொண்டு பேசினார்.

  அப்போது பேசிய மர்ம நபர் ஹீனா செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் லிங்க் ஒன்றை அனுப்பி வைத்தார் மேலும் அதன்மூலம் பணம் செலுத்தினால் உடனடியாக வேலை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பிய ஹீனா அந்த லிங்க்கை பயன்படுத்தி 3 தவணைகளாக ரூ.94ஆயிரம் பணம் செலுத்தினார். ஆனால் மர்ம நபர் கூறியபடி வேலை சம்பந்தமாக எந்த உத்தரவும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹீனா மீண்டும் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது. வேலை வாய்ப்பு உள்ளது என்று கூறி விளம்பரம் செய்து நூதனமான முறையில் மர்ம கும்பல் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.

  இதுகுறித்து ஹீனா விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×