என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தண்டையார்பேட்டை வடமாநில வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
  X

  தண்டையார்பேட்டை வடமாநில வாலிபர் கொலையில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் தெருவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுர்பதி சர்தார்.
  • கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ராயபுரம்:

  தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் தெருவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுர்பதி சர்தார்(வயது17)என்பவர் நண்பர்கள் 2 பேருடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

  நேற்று முன்தினம் சுர்பதி சர்தார் உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது நண்பர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.அவர்கள் மாலையில் திரும்பி வந்த போது வீட்டில் உள்ள அறையில் சுர்பதி சர்தார் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

  இதில் கொலையில் ஈடுபட்டது காசிமேடு பகுதியை சேர்ந்த பிரபு (27) மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், சம்பவத்தன்று செல்போன் மற்றும் பணத்தை திருட சுர்பதி சர்தார் வீட்டுக்குள் நுழைந்தோம். செல்போனை திருடியபோது அங்கிருந்த சுர்பதி சர்தார் எங்களை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டோம். இதில் அவர் இறந்து போனார் என்று கூறி உள்ளனர்.

  கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×