search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு தமிழக அரசு விருது
    X

    கலெக்டர் விஷ்ணு ஷிபா மருத்துவமனை இயக்குநர் ஹாஜி எம்.கே.எம். முஹம்மது ஷாபிக்கு விருது வழங்கியபோது எடுத்தபடம்.

    நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு தமிழக அரசு விருது

    • மாவட்ட கலெக்டர் விஷ்ணு, முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை அளித்ததற்காக தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம்.முஹம்மது ஷாபியிடம் வழங்கினார்.
    • எம்.கே.எம்.முஹம்மது ஷாபி கூறுகையில், தமிழக அரசின் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

    நெல்லை:

    நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக சிகிச்சை அளித்ததற்காக தமிழக அரசின் சார்பில் சிறந்த மருத்துவமனைக்கான விருதினை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.கே.எம்.முஹம்மது ஷாபியிடம் வழங்கினார். இதுகுறித்து எம்.கே.எம்.முஹம்மது ஷாபி கூறுகை யில், தமிழக அரசின் சிறந்த மருத்துவமனைக்கான விருதி னை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். என்றார்.

    அதன் பின்னர் ஷிபா மருத்துவமனை வளாக்தில் 75-வது சுதந்திர தின விழா கோடியேற்றத்துடன் நடைபெற்றது. இருதய நோய் மருத்துவர் கிரிஷ் தீபக் தேசிய கொடியினை ஏற்றினார். முகம்மது இப்ராஹீம், ஷாபிக், ராதா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மருத்துவ இயக்குநர் முகம்மது அராபத் நன்றி கூறினார்.

    Next Story
    ×