search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல், பழனி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் இயக்கம்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல், பழனி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் இயக்கம்

    • தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது.
    • நெல்லை- மேட்டு ப்பாளை யம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி வரை இயக்க ப்படுகிறது.

    பழனி:

    தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. அதில் நெல்லை- மேட்டு ப்பாளை யம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி வரை இயக்க ப்படுகிறது.

    இந்த ரயில் வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வழியே தென்காசிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர் 8. 40க்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழி யாக மதுரைக்கு நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் 12:55 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 1.55 மணிக்கு திண்டுக்க ல்லுக்கு வந்தடைகிறது. 2 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு அதி காலை 3.08 மணிக்கு பழனி வந்தடைகிறது. பழனியில் இருந்து 3.10 மணிக்கு கிளம்பும் ரயில் காலை 6:25 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடைகிறது. அங்கிருந்து 6.30 க்கு புறப்பட்டு 7.20 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறது.

    மறு மார்க்கத்தில் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.35 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து 8:40க்கு கிளம்பி நள்ளிரவு 11:30 மணிக்கு பழனி வந்தடை கிறது. பின்னர் அங்கிருந்து 12.35க்கு கிளம்பி திண்டுக்க ல்லுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கும், மதுரைக்கு 2.10 மணிக்கும் சென்றடைகிறது.

    பின்னர் அங்கிருந்து 2.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 7:45 மணிக்கு நெல்லை சென்று சேர்கிறது.

    Next Story
    ×